Wednesday, August 4, 2010

பிள்ளைகள் விழா 2010 - சுற்றுநிருபம் 3

02 08 2010
பிள்ளைகள் விழா 2010 - சுற்றுநிருபம் 3
அன்பிற்குரிய குருமார்களுக்கும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும்,

குழுப்பாடல் போட்டிகள்: மூன்று போட்டிகளாக நடைபெறும். 19 வயதிற்குட்பட்டோர் பங்குபெறலாம்.

1. கீர்த்தனைப்பாடல் போட்டி:
கட்டாயமாகப் பாடவேண்டிய பாடலுடன், நடுவர்களால் அவ்வேளையில் கேட்கப்படும் மற்றொரு பாடலுமாக 2 பாடல்களை பாடவேண்டும்.
தாளம், சுருதிப்பெட்டி பாவிக்கலாம்.
ஸ்வரங்கள் அமைத்து பாடுவதற்காக மேலதிக புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.


2 ஞானப்பாடல் போட்டி:
போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்ட 3 பாடல்களிலிருந்து நடுவர்களால் அவ்வேளையில் கேட்கப்படும் ஒரு பாடலை பாடவேண்டும்.

3 ஆங்கிலப்பாடல் போட்டி:
போட்டிக்கென தெரிவுசெய்யப்பட்ட பாடல்களிலிருந்து விரும்பிய ஒருபாடலை பாடலாம்.
இசைக்கருவிகளோடு பாடுதல் உற்சாகப்படுத்தப்படுகிறது.
ஓலிஅமைப்பு தேவைப்படும்பட்சத்தில் ஆங்கிலப்பாடலுக்கு தரப்படும்.


கட்டுரைப் போட்டி:
22 ஆகஸ்டு 2010 ஞாயிறு ஆலயங்களில் நடைபெறும் கட்டுரைப்போட்டிகளுக்கான வயதெல்லையும், சொற்களின் எண்ணிக்கையும்:

9 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 100 சொற்கள்
12 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 150 சொற்கள்
16 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 200 சொற்கள்
19 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 250 சொற்கள்


புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள்:
22 ஆகஸ்டு 2010 புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளில் நடைபெறுவதால், புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குபற்றும் பிள்ளைகளுக்காக மட்டும் 25 ஆகஸ்டு 2010 புதன்கிழமை அவ்வாலய குருமாரின் கண்காணிப்பில் அனைத்து தனிநபர் போட்டிகளும் (தனிப்பாடல் தவிர்ந்த) நடாத்தப்பட்டு, வினாத்தாள்களும், குறிப்புக்களும் எமக்கு மறுநாளே 26 ஆகஸ்டு 2010 அனுப்பிவைக்கப் படவேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுமாயின், பிள்ளைகளுக்கு பாராட்டுப்பத்திரங்கள் மற்றும் பரிசில்கள் கிடைப்பதில் அது தடையேற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்க.


19 வயதிற்கு கீழ்ப்பட்டோர்:
புதிர் போட்டியில் மட்டும் 20 வயதிற்கு கீழ்ப்பட்டோர் என முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தமை தற்போது தவிர்க்ப்பட்டு 19 வயதினரோடு மட்டுப்படுத்தப்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்க.






திருவிவிலியம் மனப்பாடம் செய்தல்:
முன்னர் தமிழும் ஆங்கிலப்பகுதிகளும் ஒன்றாக சொல்லப்படவேண்டும் என வழங்கப்பட்டமை தவிர்க்கப்பட்டு தமிழ் தனியாகவும், ஆங்கிலம் தனியாகவும் ஒப்புவிக்கப்படலாம் என மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு மொழியிலும் மனப்பாடம் ஒப்புவித்தால் இரண்டும் தனித்தனியான போட்டிகளாக கருதப்பட்டு, இரண்டும் சொல்வோருக்கு தனித்தனியாக இரண்டு பரிசிலும், பாராட்டும் உண்டு.
ஆங்கிலத்தை தவிர்த்து தனியே தமிழ் மொழியில் மனபாடம் ஒப்புவிக்க விரும்புவோருக்கு மேலதிகமாக தமிழ் மனனவாக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றையும் கவனத்தில் கொள்க.

தமிழில் மட்டும் மனப்பாடம் ஒப்புவிப்போர் மேலதிகமாக மனப்பாடம் செய்யவேண்டிய பகுதிகள்:

6ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும்: ஆண்டவர் கற்றுத்தந்த செபம்

9ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும்: சங்கீதம் 1:1-2, சங்கீதம் 119:9-11, சங்கீதம் 119:32,
சுங்கீதம் 119: 105, சங்கீதம் 139:14, 1 கொரிந்தியர் 10:31

12, 16 மற்றும் 19 வயது பிரிவினருக்கு: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்களை தமிழில் மனனம் செய்து ஒப்புவிக்கவேண்டும்.


பிள்ளைகள் விழா 2010
இம்முறை அளவெட்டி ஆலயத்திலும் அதனை தொடர்ந்து அளவெட்டியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மிகுதி நிகழ்வுகள் நடைபெறும்.


மேலதிக தேவைகள், விளக்கங்கள் தேவைப்படின் என்னோடு தொலைபேசி வாயிலாகவோ, அல்லது எனது செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்புவதன் வாயிலாகவோ அறியலாம்.


உங்களுக்கு இறையாசி!

இறைபணியில் அன்புடன்,



ம. யூட் சுதர்சன்

No comments:

Post a Comment