Saturday, August 28, 2010

The successful completion of Children Rally 2010

Dear Friends and well wishers,
Thank you very much for your support and prayers for the successful completion of the Children rally 2010. many have uploaded the photos of the events. you can view those at following links.



  1. MORE PHOTOS
  2. Alaveddy Church site

Monday, August 16, 2010

The theme for this year Children Rally

பிள்ளைகள் ஞாயிறு 22 ஆகஸ்டு 2010 வழிபாட்டு ஒழுங்கு

தியானம்:
கூட்டுப்பிரார்தனை அல்லது ஓர் தேவாரத்துடன் அல்லது வரவேற்புப்பாடலுடன் கூடிய நடனம் என்பவற்றின் ஏதாவதொன்றுடன் ஆரம்பிக்கலாம்.

துதிசாற்றல்:
நடத்துனர்: என்றும் எங்களோடு வாழும் நல்ல ஆண்டவரே, இந்நாளில் சிறுவர்களாகிய நாம் இவ்வாராதனையை ஏறெடுக்க தந்த கிருபைக்காக உம்மை துதிக்கின்றோம். இவ்வாராதனை வழியாக சிறுவர்கள் எம்மோடு பேசியருளும். தகப்பனே நாங்கள் உமது வழியை அறியச்செய்தருளும் என்ற திருவசனத்திற்கு ஏற்ப வாழ உதவிசெய்யும். இவ்வாராதனை தொடக்கம் முதல் நிறைவு வரை உமது பிரசன்னம் கூட இருக்க வேண்டும் என இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம், ஆமென்.

பாடல் 1: எத்தனை நாவால் துதிப்பேன் இல 22.

நடத்துனர்:
நன்றி நிறைந்த உள்ளத்துடன் ஆண்டவரை துதிப்போமாக
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள்: நமது மிட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்:

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம். புகழ்ப்பாக்களால் அவரை போற்றி ஆர்ப்பரிப்போம். வாருங்கள்.

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
ஏனெனில் ஆண்டவர் மாண்புமிகு இறைவன் தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன. மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
கடலும் அவருடையதே அவரே அதை படைத்தவர், உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
வாருங்கள் தாழ்பணிந்து அவரைத் தொழுவோம், நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழுந்தாளிடுவோம்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
அவரே நம் கடவுள், நாம் அவரது மேய்ச்சலின் ஆடுகள். நூம் அவர் பேணி வளர்க்கம் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்கு செவிகொடுத்தால் எத்துணை நலம்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்


பிழையுணர்ந்து அறிக்கையிடல்:

ஆண்டவர் திருமுன் எமது பாவங்களை அமைதியான முறையில் அறிக்கை செய்வோமாக. வா பாவி மலைத்து நில்லாதே வா என்று நம் ஆண்டவர் அழைக்கின்றார். விசுவாசத்தோடு எமது பாவங்களை ஆண்டவரிடம் சொல்லி செபிப்போம்.

அமைதி

நடத்துநர்:
எல்லாம் வல்ல கடவுளே சிறுபிள்ளைகளாகிய நாம் நீர் தந்த தாலந்துகளை நல்ல முறையில் பாவிக்காமல் உதாசீனப்படுத்தியமைக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்
(பாடல் யூதாவின் செங்கோல் இறுவட்டு, பாகம் 2)

நடத்துநர்:
எங்கள் நல்ல ஆண்டவரே சிறு பிள்ளைகளாகிய நாங்கள் பெற்றோர் பெரியவர்களை மதியாமலும், பாடசாலையில் ஆசிரியர்களுக்கு பணிந்து நடவாமலும் திருவசனத்தின்படி வாழாமலும் நடந்து வந்தமைக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்: நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்


நடத்துநர்:
ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் எமது வாழ்வில் நல்ல வழியில் செல்லாமல், கொலை, குடிபோதை, கெட்ட சகவாசங்கள், தீய நடத்தைகளில் ஈடுபட்டு எம்மையும் அழித்து ஆண்டவருக்கும் அவமரியாதை செய்ததை நினைத்து மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

நடத்துநர்:
உமது ஆலய விடயங்களில் கரிசனையற்று வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்தி வாழ்வதற்காகவும், உமது வழிகளை நாம் அறியாமல் வேறு வழிகளில் நடந்து உம்மை மறந்து போனதற்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

நடத்துநர்:
அன்பின் ஆண்டவரே கிறிஸ்தவ பி;ள்ளைகளாக நாம் இருந்தும் மற்றோருக்கு உதவாமல் போன தருணங்களுக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

பாவவிமோசனம் அறிவித்தல்:

நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் அளித்திடும் ஆறுதல் பெறுவோம்
மக்கள்: ஆறுதல் பெறுவோம்
நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் காத்திடும் ஆதரவு பெறுவோம்
மக்கள்: ஆதரவு பெறுவோம்
நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் நடத்திடும் அறநெறி நடப்போம்
மக்கள்: அறநெறி நடப்போம்
எல்லோரும்: ஆமென்.

திருவிவிலிய வாசகம் 1:

சிறப்புபாடல்:

திருவிவிலிய வாசகம் 2:

பாடல் 2
பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

கலங்கினேன் நீர் என்னை கண்டீர்
பதறினேன் நீர் என்னை பார்த்தீர்
கல்வாரியின் அண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்

என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்;

ஊனினை உருக்கிட வேண்டும்
உள்ளொளி பெருக்கிட வேண்டும்
உம் ஆவியைத் தரவேண்டும்
எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும்

அருளுரை

ஆலய அறிவித்தல்கள்:

பற்றுறுதி அறிக்கை:

மக்கள் மன்றாட்டு:

நடத்துநர்:
அன்பான தெய்வமே, எமது நாட்டில் போர் அனர்த்த்தினால் உறவுகளை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான எம்போன்ற பிள்ளைகளுக்காகவும், அவர்களது அன்புத்தேவைகள், அன்றாடத்தேவைகள் யாவும் கிடைக்கவும், அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்திட எம்மையும் வலுப்படுத்த வேண்டுமென்று மன்றாடுவோமாக

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
அன்பான ஆண்டவரே நம் நாட்டில் நடக்கும் சிறுவர் கடத்தல், பாலியல் வல்லுறவுகள். வுpளக்கமற்ற வயதில் தோன்றும் காதலால் ஏமாற்றப்படுதல், சிறுவர் து~;பிரயோகம் பொதுஇடங்களில் நடைபெறும்  சேட்டைகள் போன்ற சீர்கேடுகளிலிருந்து எம்மை காத்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடை செய்யாதிருங்கள் என்ற வாக்கியத்தை அறிந்த பிள்ளைகளாய் இயேசுவின் அன்பை நினைந்து அவர் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், ஆலயத்திற்கான தொண்டுகளிலும், பணிகளுக்கும் அதிக பங்களிப்பு நாம் வழங்கவும். வழிபாடுகளில் பங்கெடுப்பதை எமது கடமையாக கருதவும், திருவிவிலியம் வாசித்து வாழ்கின்ற பிள்ளைகளாக இருக்கவும் வரம் வேண்டி மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்


நடத்துநர்:
அன்பின் இறைவா, அமெரிக்கன் சிலோன் மி~ன் திருச்சபைக்காகவும், அதன் பணிகளுக்காகவும் உம்மிடம் மன்றாடி நிற்கின்றோம். திருச்சபையின் தலைவர், பிராந்திய தலைவர்கள், குருக்கள், பொதுநிலைபணியாளர்கள், மக்கள் அனைவரையும் நீர் ஆசிர்வதிக்கவும் அவர்களும் உமக்கு உத்தம சேவையாற்றி ஆண்டவரின் பெயரின் மாட்சிக்காக உழைக்கவும் நீர் உதவவேண்டும் என மன்றாடுகின்றோம். ஏம் ஆலயத்தினால் நடாத்தப்படும் சிறுவர் இல்லங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், முன்பள்ளிகள் இன்னும் இதர பணிகளுக்காகவும் உமது அருள்வேண்டி நிற்கின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
சமயகல்விப் பணியில் ஆர்வமாய் ஈடுபடும் குருக்கள், பொதுநிலையாளர், ஞாயிறுபாடசாலை ஆசிரியர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். சிறுபிள்ளைகள் மத்தியிலான பணியின் முக்கியத்துவத்தினை அனைவரும் உணரவும், எம் போன்ற பிள்ளைகள் சிறுவயதிலேயே ஆண்டவரின் வழிகளை கற்று உணர்ந்து அவ்வழியில் வாழுவும் அருள்தாரும். ஏம்போன்ற சிறுவரின் கல்விக்காகவும், சிறப்பான எதிர்காலத்திற்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். இன்று ஆராதனையை நடாத்த எல்லாவிதங்களிலும் உதவிசெய்யும் எம்சக சிறுவர்கள் அனைவருக்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். இவ்வாராதனையில் கலந்து கொள்ளமுடியாதுள்ள எம்சகசிறுவர்களுக்காகவும் அவர்களது கடினப்பாடுகளுக்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். நோய்வாய்ப்பட்டுள்ள எம்சகசிறுவர்களை நினைத்து உம்மிடம் மன்றாடுகின்றோம். ஆவர்களுக்கு பூரண சுகம் கிடைக்கவும் இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்


ஆண்டவர் கற்றுத்தந்த செபத்தை பாடுவோம்:
நேயநல் வானகத்தெங்கள் தந்தாய்
தூயதாய் நின்பேர் தொழப்படுக
வருக நின் அரசே திருச்சித்தமே
பெருக விண்ணதில் போல் மண்ணுலகில்
அன்றன்று வேண்டிய எம் உணவை
இன்றெமக் கீந்தருள் பொழிந்திடுவாய்
புpறர்பிழை நாங்கள் பொறுப்பதுபோல்
ஏம் பிழையும் பொறுத்தருள் புரிவீர்

சோதனை நேர்கையில் எமை விலக்கி
தீதினை நீக்கியே மீட்டருள்வாய்
ஆட்சியும் ஆற்றலும் சிர்த்திமிகு
மாட்சியும் யாண்டுமே உமக்குரிய

காணிக்கைப்பாடல் 3: வாக்களித்த வரதா பாடல் இல 159

காணிக்கைசெபம்: (பாடலாகவும் பாடலாம்)
தெய்வமே நான் ஒன்றுமில்லை எனக்கென்று ஒன்றுமில்லை
எல்லாம் நீர் தந்த தானம் (2)
நான் வாழ்வது உமது கருணை (2)

நிறைவுசெபம், ஆசீர்வாதம்

மங்களப்பாடல் சீர்யேசு நாதனுக்கு செய மங்களம் பாடல் இல 55

Wednesday, August 11, 2010

கட்டுரைப்போட்டிக்கான சொற்கள் குறைக்கப்பட்டுள்ளது!

9 வயதிற்குட்பட்டோர் 50 சொற்களும்,
12 வயதிற்குட்பட்டோர் 100 சொற்களிலும் கட்டுரைகள் வரைந்தால் போதுமானது என தீர்மானிக்கப்பட்டுள்ளதால், முன்னைய நிலையிலிருந்து குறைக்கப்பட்டுள்ளது என்பதை கவனிக்குக.

Please fill and send back the General Informations


mnkupf;fd; rpNyhd; kprd; jpUr;rig aho; gpuhe;jpak;
gps;isfs; tpoh 2010

Myaj;jpd; ngau;:
QhapW ghlrhiyg; gps;isfspd; vz;zpf;if
QhapW ghlrhiy Mrpupau;fspd; vz;zpf;if
gps;isfs; tpohtpw;F tUifjuf;$ba VidNahupd; vz;zpf;if:

gq;Fgw;Wk; Nghl;bfspd; tpguq;fs;:
1.   FOg;ghly; fPu;j;jid Nghl;b             Mk; - ,y;iy
2.   FOg;ghly; Qhdg;ghly; Nghl;b           Mk; - ,y;iy
3.   FOg;ghly; Mq;fpyk; Nghl;b             Mk; - ,y;iy

4.   tptpypag;Gjpu; Nghl;b
Ø  13 tajpw;F cl;gl;Nlhu;          FOf;fspd; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu;          FOf;fspd; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu;          FOf;fspd; vz;zpf;if

5.   jdpg;ghly; Nghl;b
Ø  6 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  9 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  12 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if

6.   kddtrdg; Nghl;b
Ø  6 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  9 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  12 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if

7.   fl;Liug; Nghl;b
Ø  9 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  12 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if

8.   tiujy; Nghl;b
Ø  6 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if (glq;fs; toq;fg;gl epwk; jPl;Ljy;)
Ø  9 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  12 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  16 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if
Ø  19 tajpw;F cl;gl;Nlhu; vz;zpf;if

ftdj;jpw;F - tanjy;iy fzpg;G:
1.1.1991 31.12.2010 tiu 19 tajpw;F cl;gl;Nlhu;
1.1.1994 31.12.2010 tiu 16 tajpw;F cl;gl;Nlhu;
1.1.1998 31.12.2010 tiu 12 tajpw;F cl;gl;Nlhu;
1.1.2001 31.12.2010 tiu  9 tajpw;F cl;gl;Nlhu;
1.1.2004 31.12.2010 tiu  6 tajpw;F cl;gl;Nlhu;

gps;isfs; tpoh rpwg;Gw eilngw vkJ xj;Jiog;ig KOtJkhf toq;FNthk;!



rig gzpahsu;                                          QhapW ghlrhiy mjpgu;


பிள்ளைகள் விழா - இறுதி அறிவித்தல்

10 ஆகஸ்டு 2010

அன்புள்ள குருமாருக்கும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும், பிள்ளைகளுக்கும்


அளவெட்டி ஆலயத்தில் பிள்ளைகள் விழா காலை வழிபாடு நடைபெற்று, பின்னர் வீதிப்பவனியாக யா-அருணாசலம் வித்தியாலத்திற்கு சென்று மிகுதி நிகழ்வுகள் யாவும் அப்பாடசாலையில் நடைபெறும்.

காலை வழிபாடு ஆரம்பமாகும் நேரம் 8.30 மணியாகும். நேரத்தை கவனத்தில் கொண்டு வரும்படி பணிவன்புடன் கேட்டு நிற்கின்றோம்.

எதிர்வரும் 22ம் திகதி பிள்ளைகள் ஞாயிறாக எல்லா ஆலயங்களிலும் அனுஸ்டிக்கும்படி கேட்டுநிற்கின்றோம். தங்களுக்கு தேவையான வழிபாட்டு ஒழுங்கு பிரதிகளுக்கு உடனடியாக பதிவுசெய்யும் படி கேட்டுநிற்கின்றோம்.

போட்டிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் ஆகஸ்டு 15 ஆகும்.

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களின் தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்களை எமக்கு வழங்கும் பட்சத்தில் இவ்வறிவித்தல்களை நேரடியாக அவர்களுக்கும் அனுப்புவது எமக்கு சாத்தியமாகும்.

வேறு தேவைகள் இருப்பின் தவறாது எம்முடன் தொடர்பு கொள்ளவும், முந்திய சுற்றுநிருபங்கள் கிடைக்கப்பெறவில்லையாயின், தொடர்பு கொள்க. இணைய வசதி இருப்பின், rebcacm.blogspot.com என்ற எமது இணையமுகவரியில் உலாவிப் பெறலாம்.


தங்களுடைய மேலான ஒத்துழைப்பிற்கு எமது நன்றிகள்



இறைபணியில் தங்கள் உண்மையுள்ள,

ம. யூட் சுதர்சன்

Wednesday, August 4, 2010

விவிலியம் மனப்பாடமாய் ஒப்புவித்தல் போட்டி: தமிழ் போட்டிக்கு விவிலிய வசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது!


பிள்ளைகள் விழா 2010: விவிலியம் மனப்பாடம் செய்தல் (தமிழ்) (தனிநபர் போட்டி)

6ம், அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்:
சங்கீதம் 23 மற்றும் ஆண்டவர் கற்றுத்தந்த செபம்


9ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்:
தமிழ்: மத்தேயு எழுதிய நற்செய்தி நூல் 6: 5-21, சங்கீதம் 1:1-2, சங்கீதம் 119:9-11, சங்கீதம் 119:32,
சங்கீதம் 119: 105, சங்கீதம் 139:14, 1 கொரிந்தியர் 10:31

12ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்
தமிழ்: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்கள் தமிழிலும் மற்றும் மத்தேயு 7ம் அதிகாரம்

16ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும்
தமிழ்: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்கள் தமிழிலும் மற்றும யோவான் எழுதிய நற்செய்தி நூல் 6: 22-58

19ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்
தமிழ்: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்கள் தமிழிலும் மற்றும உரோமையர் 3ம் அதிகாரம்


அருட்திரு. ம. யூட் சுதர்சன்

இயக்குநர்,
சமய கல்விக்குழு
யாழ்ப்பாணப் பிராந்தியம்

பிள்ளைகள் விழா 2010 - சுற்றுநிருபம் 3

02 08 2010
பிள்ளைகள் விழா 2010 - சுற்றுநிருபம் 3
அன்பிற்குரிய குருமார்களுக்கும், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும்,

குழுப்பாடல் போட்டிகள்: மூன்று போட்டிகளாக நடைபெறும். 19 வயதிற்குட்பட்டோர் பங்குபெறலாம்.

1. கீர்த்தனைப்பாடல் போட்டி:
கட்டாயமாகப் பாடவேண்டிய பாடலுடன், நடுவர்களால் அவ்வேளையில் கேட்கப்படும் மற்றொரு பாடலுமாக 2 பாடல்களை பாடவேண்டும்.
தாளம், சுருதிப்பெட்டி பாவிக்கலாம்.
ஸ்வரங்கள் அமைத்து பாடுவதற்காக மேலதிக புள்ளிகள் வழங்கப்படமாட்டாது.


2 ஞானப்பாடல் போட்டி:
போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்ட 3 பாடல்களிலிருந்து நடுவர்களால் அவ்வேளையில் கேட்கப்படும் ஒரு பாடலை பாடவேண்டும்.

3 ஆங்கிலப்பாடல் போட்டி:
போட்டிக்கென தெரிவுசெய்யப்பட்ட பாடல்களிலிருந்து விரும்பிய ஒருபாடலை பாடலாம்.
இசைக்கருவிகளோடு பாடுதல் உற்சாகப்படுத்தப்படுகிறது.
ஓலிஅமைப்பு தேவைப்படும்பட்சத்தில் ஆங்கிலப்பாடலுக்கு தரப்படும்.


கட்டுரைப் போட்டி:
22 ஆகஸ்டு 2010 ஞாயிறு ஆலயங்களில் நடைபெறும் கட்டுரைப்போட்டிகளுக்கான வயதெல்லையும், சொற்களின் எண்ணிக்கையும்:

9 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 100 சொற்கள்
12 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 150 சொற்கள்
16 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 200 சொற்கள்
19 வயதிற்கு கீழ்ப்பட்டோர்: 250 சொற்கள்


புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள்:
22 ஆகஸ்டு 2010 புலமைப்பரிசில் பரீட்சையும் பாடசாலைகளில் நடைபெறுவதால், புலமைப்பரிசில் பரீட்சையில் பங்குபற்றும் பிள்ளைகளுக்காக மட்டும் 25 ஆகஸ்டு 2010 புதன்கிழமை அவ்வாலய குருமாரின் கண்காணிப்பில் அனைத்து தனிநபர் போட்டிகளும் (தனிப்பாடல் தவிர்ந்த) நடாத்தப்பட்டு, வினாத்தாள்களும், குறிப்புக்களும் எமக்கு மறுநாளே 26 ஆகஸ்டு 2010 அனுப்பிவைக்கப் படவேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுமாயின், பிள்ளைகளுக்கு பாராட்டுப்பத்திரங்கள் மற்றும் பரிசில்கள் கிடைப்பதில் அது தடையேற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்க.


19 வயதிற்கு கீழ்ப்பட்டோர்:
புதிர் போட்டியில் மட்டும் 20 வயதிற்கு கீழ்ப்பட்டோர் என முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தமை தற்போது தவிர்க்ப்பட்டு 19 வயதினரோடு மட்டுப்படுத்தப்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்க.






திருவிவிலியம் மனப்பாடம் செய்தல்:
முன்னர் தமிழும் ஆங்கிலப்பகுதிகளும் ஒன்றாக சொல்லப்படவேண்டும் என வழங்கப்பட்டமை தவிர்க்கப்பட்டு தமிழ் தனியாகவும், ஆங்கிலம் தனியாகவும் ஒப்புவிக்கப்படலாம் என மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு மொழியிலும் மனப்பாடம் ஒப்புவித்தால் இரண்டும் தனித்தனியான போட்டிகளாக கருதப்பட்டு, இரண்டும் சொல்வோருக்கு தனித்தனியாக இரண்டு பரிசிலும், பாராட்டும் உண்டு.
ஆங்கிலத்தை தவிர்த்து தனியே தமிழ் மொழியில் மனபாடம் ஒப்புவிக்க விரும்புவோருக்கு மேலதிகமாக தமிழ் மனனவாக்கியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றையும் கவனத்தில் கொள்க.

தமிழில் மட்டும் மனப்பாடம் ஒப்புவிப்போர் மேலதிகமாக மனப்பாடம் செய்யவேண்டிய பகுதிகள்:

6ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும்: ஆண்டவர் கற்றுத்தந்த செபம்

9ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும்: சங்கீதம் 1:1-2, சங்கீதம் 119:9-11, சங்கீதம் 119:32,
சுங்கீதம் 119: 105, சங்கீதம் 139:14, 1 கொரிந்தியர் 10:31

12, 16 மற்றும் 19 வயது பிரிவினருக்கு: ஆங்கிலத்தில் தரப்பட்ட அதே வாக்கிங்களை தமிழில் மனனம் செய்து ஒப்புவிக்கவேண்டும்.


பிள்ளைகள் விழா 2010
இம்முறை அளவெட்டி ஆலயத்திலும் அதனை தொடர்ந்து அளவெட்டியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மிகுதி நிகழ்வுகள் நடைபெறும்.


மேலதிக தேவைகள், விளக்கங்கள் தேவைப்படின் என்னோடு தொலைபேசி வாயிலாகவோ, அல்லது எனது செல்லிடப்பேசியில் குறுந்தகவல் அனுப்புவதன் வாயிலாகவோ அறியலாம்.


உங்களுக்கு இறையாசி!

இறைபணியில் அன்புடன்,



ம. யூட் சுதர்சன்