Monday, August 16, 2010

பிள்ளைகள் ஞாயிறு 22 ஆகஸ்டு 2010 வழிபாட்டு ஒழுங்கு

தியானம்:
கூட்டுப்பிரார்தனை அல்லது ஓர் தேவாரத்துடன் அல்லது வரவேற்புப்பாடலுடன் கூடிய நடனம் என்பவற்றின் ஏதாவதொன்றுடன் ஆரம்பிக்கலாம்.

துதிசாற்றல்:
நடத்துனர்: என்றும் எங்களோடு வாழும் நல்ல ஆண்டவரே, இந்நாளில் சிறுவர்களாகிய நாம் இவ்வாராதனையை ஏறெடுக்க தந்த கிருபைக்காக உம்மை துதிக்கின்றோம். இவ்வாராதனை வழியாக சிறுவர்கள் எம்மோடு பேசியருளும். தகப்பனே நாங்கள் உமது வழியை அறியச்செய்தருளும் என்ற திருவசனத்திற்கு ஏற்ப வாழ உதவிசெய்யும். இவ்வாராதனை தொடக்கம் முதல் நிறைவு வரை உமது பிரசன்னம் கூட இருக்க வேண்டும் என இறைமகன் இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம், ஆமென்.

பாடல் 1: எத்தனை நாவால் துதிப்பேன் இல 22.

நடத்துனர்:
நன்றி நிறைந்த உள்ளத்துடன் ஆண்டவரை துதிப்போமாக
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள்: நமது மிட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்:

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம். புகழ்ப்பாக்களால் அவரை போற்றி ஆர்ப்பரிப்போம். வாருங்கள்.

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
ஏனெனில் ஆண்டவர் மாண்புமிகு இறைவன் தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன. மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
கடலும் அவருடையதே அவரே அதை படைத்தவர், உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
வாருங்கள் தாழ்பணிந்து அவரைத் தொழுவோம், நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழுந்தாளிடுவோம்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்

நடத்துநர்:
அவரே நம் கடவுள், நாம் அவரது மேய்ச்சலின் ஆடுகள். நூம் அவர் பேணி வளர்க்கம் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்கு செவிகொடுத்தால் எத்துணை நலம்

மக்கள்:
வாருங்கள் ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள், நமது மீட்பின் பாறையை போற்றி ஆர்ப்பரியுங்கள்


பிழையுணர்ந்து அறிக்கையிடல்:

ஆண்டவர் திருமுன் எமது பாவங்களை அமைதியான முறையில் அறிக்கை செய்வோமாக. வா பாவி மலைத்து நில்லாதே வா என்று நம் ஆண்டவர் அழைக்கின்றார். விசுவாசத்தோடு எமது பாவங்களை ஆண்டவரிடம் சொல்லி செபிப்போம்.

அமைதி

நடத்துநர்:
எல்லாம் வல்ல கடவுளே சிறுபிள்ளைகளாகிய நாம் நீர் தந்த தாலந்துகளை நல்ல முறையில் பாவிக்காமல் உதாசீனப்படுத்தியமைக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்
(பாடல் யூதாவின் செங்கோல் இறுவட்டு, பாகம் 2)

நடத்துநர்:
எங்கள் நல்ல ஆண்டவரே சிறு பிள்ளைகளாகிய நாங்கள் பெற்றோர் பெரியவர்களை மதியாமலும், பாடசாலையில் ஆசிரியர்களுக்கு பணிந்து நடவாமலும் திருவசனத்தின்படி வாழாமலும் நடந்து வந்தமைக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்: நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்


நடத்துநர்:
ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் எமது வாழ்வில் நல்ல வழியில் செல்லாமல், கொலை, குடிபோதை, கெட்ட சகவாசங்கள், தீய நடத்தைகளில் ஈடுபட்டு எம்மையும் அழித்து ஆண்டவருக்கும் அவமரியாதை செய்ததை நினைத்து மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

நடத்துநர்:
உமது ஆலய விடயங்களில் கரிசனையற்று வேறு விடயங்களில் அதிக கவனம் செலுத்தி வாழ்வதற்காகவும், உமது வழிகளை நாம் அறியாமல் வேறு வழிகளில் நடந்து உம்மை மறந்து போனதற்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

நடத்துநர்:
அன்பின் ஆண்டவரே கிறிஸ்தவ பி;ள்ளைகளாக நாம் இருந்தும் மற்றோருக்கு உதவாமல் போன தருணங்களுக்காக மனம் வருந்துகின்றோம்.

மக்கள்:
நான் பாவி தான், ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர் இன்று உம்பிள்ளை நான் இயேசையா இன்று உம்பிள்ளை நான்

பாவவிமோசனம் அறிவித்தல்:

நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் அளித்திடும் ஆறுதல் பெறுவோம்
மக்கள்: ஆறுதல் பெறுவோம்
நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் காத்திடும் ஆதரவு பெறுவோம்
மக்கள்: ஆதரவு பெறுவோம்
நடத்துநர்: அருள்மயமாகிய ஆண்டவர் நடத்திடும் அறநெறி நடப்போம்
மக்கள்: அறநெறி நடப்போம்
எல்லோரும்: ஆமென்.

திருவிவிலிய வாசகம் 1:

சிறப்புபாடல்:

திருவிவிலிய வாசகம் 2:

பாடல் 2
பாதை தெரியாத ஆட்டைப் போல அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

கலங்கினேன் நீர் என்னை கண்டீர்
பதறினேன் நீர் என்னை பார்த்தீர்
கல்வாரியின் அண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்

என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்;

ஊனினை உருக்கிட வேண்டும்
உள்ளொளி பெருக்கிட வேண்டும்
உம் ஆவியைத் தரவேண்டும்
எம் நெஞ்சம் மகிழ்ந்திட வேண்டும்

அருளுரை

ஆலய அறிவித்தல்கள்:

பற்றுறுதி அறிக்கை:

மக்கள் மன்றாட்டு:

நடத்துநர்:
அன்பான தெய்வமே, எமது நாட்டில் போர் அனர்த்த்தினால் உறவுகளை இழந்து அனாதைகளாக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான எம்போன்ற பிள்ளைகளுக்காகவும், அவர்களது அன்புத்தேவைகள், அன்றாடத்தேவைகள் யாவும் கிடைக்கவும், அவர்களுக்கு நம்மாலான உதவிகளை செய்திட எம்மையும் வலுப்படுத்த வேண்டுமென்று மன்றாடுவோமாக

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
அன்பான ஆண்டவரே நம் நாட்டில் நடக்கும் சிறுவர் கடத்தல், பாலியல் வல்லுறவுகள். வுpளக்கமற்ற வயதில் தோன்றும் காதலால் ஏமாற்றப்படுதல், சிறுவர் து~;பிரயோகம் பொதுஇடங்களில் நடைபெறும்  சேட்டைகள் போன்ற சீர்கேடுகளிலிருந்து எம்மை காத்தருள வேண்டுமென்று மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள் அவர்களை தடை செய்யாதிருங்கள் என்ற வாக்கியத்தை அறிந்த பிள்ளைகளாய் இயேசுவின் அன்பை நினைந்து அவர் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும், ஆலயத்திற்கான தொண்டுகளிலும், பணிகளுக்கும் அதிக பங்களிப்பு நாம் வழங்கவும். வழிபாடுகளில் பங்கெடுப்பதை எமது கடமையாக கருதவும், திருவிவிலியம் வாசித்து வாழ்கின்ற பிள்ளைகளாக இருக்கவும் வரம் வேண்டி மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்


நடத்துநர்:
அன்பின் இறைவா, அமெரிக்கன் சிலோன் மி~ன் திருச்சபைக்காகவும், அதன் பணிகளுக்காகவும் உம்மிடம் மன்றாடி நிற்கின்றோம். திருச்சபையின் தலைவர், பிராந்திய தலைவர்கள், குருக்கள், பொதுநிலைபணியாளர்கள், மக்கள் அனைவரையும் நீர் ஆசிர்வதிக்கவும் அவர்களும் உமக்கு உத்தம சேவையாற்றி ஆண்டவரின் பெயரின் மாட்சிக்காக உழைக்கவும் நீர் உதவவேண்டும் என மன்றாடுகின்றோம். ஏம் ஆலயத்தினால் நடாத்தப்படும் சிறுவர் இல்லங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், முன்பள்ளிகள் இன்னும் இதர பணிகளுக்காகவும் உமது அருள்வேண்டி நிற்கின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்

நடத்துநர்:
சமயகல்விப் பணியில் ஆர்வமாய் ஈடுபடும் குருக்கள், பொதுநிலையாளர், ஞாயிறுபாடசாலை ஆசிரியர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். சிறுபிள்ளைகள் மத்தியிலான பணியின் முக்கியத்துவத்தினை அனைவரும் உணரவும், எம் போன்ற பிள்ளைகள் சிறுவயதிலேயே ஆண்டவரின் வழிகளை கற்று உணர்ந்து அவ்வழியில் வாழுவும் அருள்தாரும். ஏம்போன்ற சிறுவரின் கல்விக்காகவும், சிறப்பான எதிர்காலத்திற்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். இன்று ஆராதனையை நடாத்த எல்லாவிதங்களிலும் உதவிசெய்யும் எம்சக சிறுவர்கள் அனைவருக்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். இவ்வாராதனையில் கலந்து கொள்ளமுடியாதுள்ள எம்சகசிறுவர்களுக்காகவும் அவர்களது கடினப்பாடுகளுக்காகவும் உம்மிடம் மன்றாடுகின்றோம். நோய்வாய்ப்பட்டுள்ள எம்சகசிறுவர்களை நினைத்து உம்மிடம் மன்றாடுகின்றோம். ஆவர்களுக்கு பூரண சுகம் கிடைக்கவும் இறைவா உம்மிடம் மன்றாடுகின்றோம்.

மக்கள்:
எந்தன் செபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடிவந்தேன்


ஆண்டவர் கற்றுத்தந்த செபத்தை பாடுவோம்:
நேயநல் வானகத்தெங்கள் தந்தாய்
தூயதாய் நின்பேர் தொழப்படுக
வருக நின் அரசே திருச்சித்தமே
பெருக விண்ணதில் போல் மண்ணுலகில்
அன்றன்று வேண்டிய எம் உணவை
இன்றெமக் கீந்தருள் பொழிந்திடுவாய்
புpறர்பிழை நாங்கள் பொறுப்பதுபோல்
ஏம் பிழையும் பொறுத்தருள் புரிவீர்

சோதனை நேர்கையில் எமை விலக்கி
தீதினை நீக்கியே மீட்டருள்வாய்
ஆட்சியும் ஆற்றலும் சிர்த்திமிகு
மாட்சியும் யாண்டுமே உமக்குரிய

காணிக்கைப்பாடல் 3: வாக்களித்த வரதா பாடல் இல 159

காணிக்கைசெபம்: (பாடலாகவும் பாடலாம்)
தெய்வமே நான் ஒன்றுமில்லை எனக்கென்று ஒன்றுமில்லை
எல்லாம் நீர் தந்த தானம் (2)
நான் வாழ்வது உமது கருணை (2)

நிறைவுசெபம், ஆசீர்வாதம்

மங்களப்பாடல் சீர்யேசு நாதனுக்கு செய மங்களம் பாடல் இல 55

No comments:

Post a Comment