Thursday, July 22, 2010

Children's Rally - Circular 2

அன்புள்ள குருமாருக்கும்> ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கும்>


பின்வரும் விடயங்களை தயவுசெய்து கவனத்தில் எடுக்கவும்


தங்கள் ஆலயத்தில் இருந்து பிள்ளைகள் விழா போட்டிகளில் பங்குபெறுதல் சம்பந்தமாக போட்டியின் பெயர்> பங்குபற்றும் பிள்ளைகளின் பெயர்> பிறந்த திகதி என்பவற்றை தனித்தனி தாள்களில் சரியாக நிரப்பி ஞாயிறு பாடசாலை அதிபரினதும்> ஆலயகுருவினதும் கையொப்பங்களோடு ஆகஸ்டு 14ம் திகதிக்கு முன்னதாக எம்மிடம் அனுப்பிவைக்கவும்.


பிள்ளைகள் விழாவன்று நடைபெறும் கண்காட்சியில் உங்கள் பிள்ளைகளின் ஆக்கங்களை அல்லது உங்களது கற்பித்தல் சம்பந்தமான விளக்கங்களை கண்காட்சிப்படுத்தலாம். அவற்றிற்குரிய ஆயத்தங்களை செய்யுங்கள்.


மாலை பரிசளிப்பு நிகழ்வு நேரத்தில் கலை நிகழ்வுகள் வழங்க விரும்பும் ஆலயங்கள் அவற்றை 22 ஆகஸ்டு 2010க்கு முன்னதாக தந்து உதவுங்கள்.


22 ஆகஸ்டு 2010 அன்று பிள்ளைகள் ஞாயிறாக அனு~;டிப்பதானால் அதற்குரிய வழிபாட்டொழுங்கு தயாரித்து வழங்குவதற்காக தங்கள் தங்கள் ஆலயங்களிற்கு எவ்வளவு பிரதிகள் தேவை என்பதை 14 ஆகஸ்டு 2010இற்கு முன்னதாக அறியத்தாருங்கள். 22ம் திகதி உங்கள் ஆலயவழிபாடுகளில் பயன்படுத்தும் இவ்வழிபாட்டு ஒழுங்குபிரதிகளையும் 28ம் திகதி பிள்ளைகள் விழாவிற்கு வருகையில் கொண்டுவாருங்கள்.


கடந்த பிள்ளைகள் விழா போட்டியில் வழங்கப்பட்ட வெற்றிக்கேடயங்கள்> மற்றும் கிண்ணங்களை தயவுசெய்து பிள்ளைகள் விழாவுக்கு முன்பதாக (28ம் திகதி) தலைமைச்செயலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்கப்படுகின்றீர்கள்.


பிள்ளைகள் விழாவிற்கான பல்வேறு செலவுகள் இருப்பதனால் இத்திருப்பணிக்கு பணவுதவி வழங்கவோ> பொருளாக கொடுத்துதவோ (வெற்றிக்கேடயங்கள், வெற்றிக்கிண்ணங்கள்> தேநீர் சிற்றுண்டிச்செலவுகள்) அல்லது உடலுழைப்பால் உதவ விரும்புவோர் உங்கள் ஆலயங்களில் இருப்பின் தயவுசெய்து எம்மோடு தொடர்புகொள்ளுங்கள். தங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றோம்.


பிள்ளைகள் விழாவுக்கு வரும்போது உங்கள் ஆலய கொடிகள் மற்றும் தேனீருக்கான வாளிகள் குவளைகள் என்பவற்றையும் ஒவ்வொரு பிள்ளைகளும் தமக்குரிய மதியவுணவையும் கொண்டுவரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.


பிள்ளைகள் விழா கோட்டா பணம் ஒவ்வொரு ஆலயத்திற்கும் ரூபா 1000 என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து பிள்ளைகள் விழாவன்று இப்பணத்தினை செலுத்தும்படி அன்புடன் கேட்கப்படுகின்றீர்கள். பாடல்கள் பழகுவதற்காக தயாரிக்கப்பட்ட இறுவட்டுகளின் விலையையும் செலுத்தி உதவும்படி அன்புடன் வேண்டுகின்றோம்.


அதிக போட்டிகளில் பங்குபற்றி முதல் மூன்று இடங்களை பெறும் ஆலயங்களுக்கு சிறப்பு பரிசில்கள் வழங்கப்படும். உங்கள் ஆலயங்களில் இருந்து பெரியவர்களையும் அழைத்து வாருங்கள். இப்பொழுதே ஆயத்தப்படுங்கள்.


பிள்ளைகள் விழாவிற்காகவும்> எமக்காகவும் தயவுசெய்து nஐபியுங்கள். இத்திருப்பணியில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் ஆண்டவர் ஆசிர்வதிக்கவும்> இந்நிகழ்வுகள் எமது சிறுவர்களின் ஆன்மிகவளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும்> தாமாக முன்வந்து உதவுபவர்களை ஆண்டவர் ஏற்படுத்தித்தரவேண்டும் எனவும் nஐபிக்கும்படி அன்போடு கேட்டுநிற்கின்றேன்.


மேலதிக விபரங்களை rebcacm.blogspot.com என்ற இணைய தளத்திலும்> உங்கள் தொடர்புகளுக்கு religiouseducationboard@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அல்லது எனது தொலைபேசி இல. 0773 55 99 44 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுங்கள்.



அருட்திரு. ம. யூட் சுதர்சன்

இயக்குநர்> சமயக் கல்விக்குழு


No comments:

Post a Comment