Thursday, July 22, 2010

Bro. Dhevananth Ariyathas - Coordinator for Youth Work Writes to You!

21.07.2010

கிறிஸ்துவுக்கு பிரியமான சபை ஊழியருக்கும், வாலிப சங்க பிரதிநிதிகளுக்கும்,
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்து;துக்கள்

அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையின் யாழ் பிராந்திய வாலிப பணிக்கான கூட்டுனராக என்னை தெரிவு செய்தமைக்கு உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துதல்களையும் தெரிவிப்பதுடன் இவ் உன்னத பணியை செய்ய வாய்ப்பு கொடுத்த ஆண்டவருக்கும் நன்றி செலுத்துகிறேன்.

இவ் ஆண்டு முழுவதும் வாலிபர்களை ஆவிக்குரிய காரியங்களில் வழிநடத்துவதும் ஒவ்வொரு திருச்சபை வாலிபசங்கங்களையும் சந்தித்து தேவனுடனான உறவை அதிகரிக்க செய்து தேவனுடைய இராட்சியத்தை கட்டுவதே என்னுடைய விருப்பமாக இருக்கின்றது. மாதத்தில் ஒரு நாளாவது வாலிபர் ஐக்கிய சங்க கூட்டம் நடைபெறுவது விரும்பத்தக்கது அந்த நாளையும் நேரத்தையும் எனக்கு அறிவித்தால் உங்களை சந்திக்க கூடியதாக இருக்கும்.

இவ் ஆண்டில் ஒருநாள் ஒன்றுகூடல் வேதப்படிப்படிப்புக்களையும், வாலிப பாசறையும் வைக்க திட்டமிட்டுள்ளோம் இவ் நிகழ்வுகளுக்கு உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன். இன் நிகழ்வுகளுக்கு முதல் தங்கள் சபையில் உள்ள வாலிபர்கள் அனைவரையும் சந்தித்து கலந்துரையாட விரும்புகின்றேன்.
தேவனுடைய இராச்சியத்தை கட்ட சேர்ந்து உழைப்பீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

தேவன் தாமே உங்களையும் உங்கள் பணிகளையும் ஆசீர்வதிப்பார்

நன்றி

சகோ. அ. தேவானந்

குறிப்பு :- தொடர்புகளுக்கு
அருட்திரு. யூட் சுதர்சன் - 0773559944
சகோ. அ. தேவானந் - 0777170776




No comments:

Post a Comment