Thursday, July 22, 2010

சிறுவர் விழா Children's Rally - Circular 1

அன்பிற்குரிய போதகர்மார், ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கள், பிள்ளைகளுக்கு நமதாண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துக்கள்.

அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையினது யாழ்ப்பாணப் பிராந்தியத்தின் சிறுவர் விழா (Children's Rally 2010) எதிர்வரும் ஆகஸ்டு மாதம் 28ம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கான ஆயத்தங்களை ஆரம்பிப்பதற்காக 20.06.2010 அன்று கூடிய சமயக்கல்விக் குழுவினர் பின்வரும் முடிவுகளை மேற்கொண்டுள்ளனர். தயவுசெய்து ஓவ்வொருவரும் தங்களாலான பூரண பங்களிப்பினை வழங்கி சிறுவரை இறையுறவில் வளர்க்கும் சிறுவர் மத்தியிலான சமயக்கல்விப் பணியில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்.

புpன்வரும் வாசகம் இவ்வருட சிறுவர் ஒன்றுகூடலுக்கான மகுடவாக்கியமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

‘ஆண்டவரே, உமது வழிகளை நான் அறியச்செய்தருளும்’ திருப்பாடல்கள் 25: 4


பாடல் போட்டிகள்:
குழுப்பாடல்: கீர்த்தனைகள்

4 பாரம்பரிய கீர்த்தனைகள் வழங்கப்பட்டு, போட்டியின் போது நடுவர்களால் கேட்கப்படும் ஒரு கீர்த்தனையை பாடவேண்டும்.

திருச்சபை பாட்டுப்புத்தகத்திலிருந்து போட்டிக்காக தெரிவுசெய்யப்பட்ட கீர்த்தனைகளாவன:
353 – சுவிசேடங் கூறுவோம் வாரீர்
355 -- ஐPவ வசனம் கூறுவோம் சகோதரரே
317 – புத்தியாய் நடந்து வாருங்கள்
176 – நின்பாதம் துணையல்லால் வேறொரு துணையில்லை

குழுப்பாடல்: ஞானப்பாடல்கள்

திருச்சபை பாட்டுப்புத்தகத்திலிருந்து 3 ஞானப்பாடல்கள் வழங்கப்பட்டுள்ளது. போட்டியின் போது நடுவர்களால் வழங்கப்படும் ஒரு ஞானப்பாடலை பாடவேண்டும்.

தெரிவுசெய்யப்பட்ட பாடல்கள்:

  1. ஞானப்பாடல் 132 பாதை காட்டும் மாஜெகோவா
  2. ஞானப்பாடல் 133 வல்லதேவன் கூறுவித்து சொல்லும் வாக்கை கேளுங்கள்
  3. ஞானப்பாடல் 225 தேவன் சேமமாய் காப்பாராக

கீர்த்தனைகள் மற்றும் ஞானப்பாடல்களை பழகுவதற்காக ஆடீயோ இறுவட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.

குழுப்பாடல் ஆங்கிலம்

4 பாடல்கள் தரப்பட்டுள்ளது. விரும்பிய பாடலை தெரிவு செய்து பாடலாம். தனியான வீடீயோ இறுவட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. பார்த்து பயிற்சி பெறவும்.

  1. God will make a way – By Don Moen
  2. When I look into your holiness -
  3. God is good all the time – By Don moen
  4. My life is in you lordHossanna Music – Album: Shout to the Lord


தனிப்பாடல்:

போட்டிக்கான பிரிவுகள்:

6ம், அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்: ஏதேனும் ஒரு பாடல்
9ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும்: குழுப்பாடலுக்காக தரப்பட்டவற்றுள் விரும்பிய ஒன்று
12ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும் தேவாரங்கள் 104 அல்லது 232 விரும்பியதொன்று
16ம் அதற்கு கீழ்ப்;பட்ட வயதினரும் திருப்புகழ் 28 அல்லது 209 விரும்பியதொன்று
19ம் அதற்கு கீழ்ப்பட்ட வயதினரும் விருத்தம் 66, 93, 304 ஆகிய மூன்றில் விரும்பியதொன்று

பழகுவதற்கு உதவிகள் தேவைப்படின் அருட்திரு. தேவமித்திரன் அவர்களை அவரது தொலைபேசியில் 0771319168 என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.


விவிலிய புதிர்போட்டி:

போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடைபெறும். ஒரு குழுவில் 4 அங்கத்தவர்கள் பங்கேற்பர். வுயதெல்லை 31.12.2010 வரை கணிக்கப்படும். பவர் மொழிப்பெயர்ப்பு (OLD VERSION) பயன்படுத்தப்படவேண்டும்.


1. 13 வயதிற்கு கீழ்ப்பட்டோர்:
ஆதியாகமம் 1–4, ஆதியாகமம் 11:1-9, ஆதியாகமம் 12: 1-9, ஆதியாகமம் 21, 22.
மத்தேயு எழுதிய நற்செய்திநூல் 1:16 – 7:29

மனன வசனங்கள்: ஆதியாகமம் 1:27, ஆதி2:15, ஆதி4:7, ஆதி12:2, ஆதி 22:18,
மத்தேயு1:23, மத்5:16, மத்5:37, மத்6:6, மத்6:24, மத்7:12.

2. 16 வயதிற்கு கீழ்ப்பட்டோர்:

லூக்கா எழுதிய நற்செய்தி நூல் மற்றும் யாத்திராகமம் 20 அதிகாரம்.

மனன வசனங்கள்: லூக்கா 6:27-28, லூக்கா 6:45-46, லூக்கா 18:7-8, லூக்கா 11:34-36, லூக்கா 12:15, லூக்கா 12:47-48, லூக்கா 13:34, லூக்கா 21:33-34, லூக்கா 22:31-32, லூக்கா 24:5-6.

3. 20 வயதிற்கு உட்பட்டோர்:

அப்போஸ்தலர் நடபடிகள், தீமோத்தேயுவிற்கு எழுதிய முதலாம், இரண்டாம் திருமுகங்கள்.

மனன வசனங்கள்: அப்1:8, அப்2:17-18;, அப்4:19-20, 1தீமோத்தேயு 6:10-11, 1தீமோ 6:6, 1தீமோ 4:7, 1தீமோ 4:12, 2தீமோ 1:7-8, 2தீமோ 2: 11-12, 2தீமோ 2: 22-23, அப்போஸ்தலர் நடபடிகள்1:8, அப்2:17-18, அப்4: 19-20.



பிள்ளைகள் ஞாயிறு (22 ஆகஸ்டு 2010) அனுஷ்டிக்கப்படும். இதற்கான வழிபாட்டு ஒழுங்கு விரைவில் தயாரிக்கப்பட்டு உங்களுக்கு அறியத்தரப்படும். ஊங்களுக்கு தேவையான பிரதிகளின் எண்ணிக்கையை இப்பொழுதே எனக்கு குறுந்தகவல் மூலமாக அறியத்தாருங்கள். எனது தொலைபேசி இலக்கம்: 0773 559944.

இதே நாளில் இவ்வருட மகுடவாக்கியத்தை ஒட்டிய கட்டுரைப்போட்டிகள், வரைதல் போட்டிகள் மற்றும் மனன வசனங்கள் என்பன தங்கள் தங்கள் ஆலயங்களிலேயே நடைபெறும். மேற்பார்வையாளர்கள் உங்கள் ஆலயங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.

போட்டிகளுக்கு ஆயத்தப்படுங்கள்.

ஆண்டவரின் ஆசி அனைவரோடும் இருப்பதாக!

அருட்திரு. ம. யூட் சுதர்சன்
சமய கல்விக்குழு இயக்குநர்
13 யூலை 2010

No comments:

Post a Comment