Thursday, August 18, 2011

ஏன் சிறுவர் அருட்பணி?

அருட்திரு. ம. யூட் சுதர்சன்,
CACM ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கட்கான பயிற்சி,
CACM ஆலயம், மானிப்பாய்,
 28 பெப்ரவரி, 2009


ஏன் சிறுவர் அருட்பணி?

சிறுவர் அருட்பணியானது திருச்சபையின் ஓர் முதலீடாகும்
எந்தவொரு நாட்டினதும் உண்மையான சொத்து யாதெனில் சிறுவராகும், அவர்களில் தான் எதிர்காலத்தின் நம்பிக்கையே உள்ளது என்கிறார் ஜேம்ஸ் டொப்சன். திருச்சபைக்கும் அதன் எதிர்காலம் வளமானதாக அமையவேண்டுமாயின், விசுவாசமிக்க சந்ததியை இப்பொழுதே உருவாக்கவென செயற்படுவதே உத்தமம். ஆதற்காகவே திருச்சபைகள் சிறுவர் அருட்பணி அல்லது கிறிஸ்தவ கல்வி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்திவருகின்றன.

சரியான திசையிலான வளர்ச்சிச்சூழல்;;;

சிறுவயதில் கிடைக்கும் சரியான அனுபவங்கள் அன்புகொண்ட, கருணைகொண்ட, தன்னடையாளங்களை சிறப்பாக விளங்கிக்கொண்ட, தனித்துவம்மிக்க மக்களை  உருவாக்குகின்றது. லூக்கா 2: 40 இயேசுவின் வளர்ச்சியை நாம் இங்கு இவ்வாறு விளங்கிக்கொள்ளலாம்.   உங்களது சிறப்புமிக்க கற்பித்தலினால் அல்ல, மாறாக நீங்கள் எவ்வளவிற்கு சிறப்பான வகையில் ஓர் ஆரோக்கியமான விசுவாச வளர்ச்சிக்கேற்ற சூழலை வழங்குகின்றீர்கள் என்பதில்தான் உங்களது சிறுவர் அருட்பணியின் நீண்டகால நிலைத்ததன்மை வெளிப்படுகின்றது.
சரியான பாதையில் நெறிப்படுத்தப்படும் சிறுவர் அருட்பணியின் விளைவுகள்:
ஓவ்வொரு சிறுபிள்ளையும் தன்வாழ்வுக்காலத்தில் பெறும் செல்வாக்கினால்தான் ஒவ்வோர் சிறுவர் அருட்பணியும் மதிப்பிடப்படும்.

சரியான விசுவாச உருவாக்கம்: (Pழளவைiஎந குயiவா குழசஅயவழைn)

 அற்புதங்கள், அடையாளங்களால் உருவாகும் விசுவாசம் நீடித்து நிலைப்பதில்லை உதாரணம்:; வனாந்தரத்தில் அலைந்த இஸ்ரயேலருக்கு சரியான, என்றும் நிலைக்கக்கூடிய விசுவாசம் உண்டாகவேண்டி மோசே முனிவர் உழைத்தார். அவர்களை ஓர் தேசியஇனமாகவும், கடவுளின் மக்களாகவும் உருவாக்க சரியான தெளிவான விசுவாச அடிப்படைகளை மோசே வழங்கினார். ஆற்புதங்களை மட்டும் நம்பி புளங்காகிதம் அடைந்தவர்கள் துன்பம் வந்தபோது துவண்டு போயினர். உயிருள்ள இறைவனின் வார்த்;தைகளில் ஆழமான விசுவாச உறுதியோடு வாழ்ந்தவர்கள் மட்டும் துவண்டுபோகாமலும், வேறு அற்புதம் செய்யும் கடவுளரை தேடி ஓடாமலும் இருந்தனர்.  உபாகமம் 6: 6,7

குறுகிய கால, நீண்ட கால விசுவாச கட்டுமானங்கள் (ளூழசவ வநசஅ எநசளரள டுழபெ வநசஅ குயiவா டீரடைனiபெ)

செயற்றிறன்மிகு சிறுவர் அருட்பணியானது, சிறுபராயத்திற்கு மட்டுமல்லாது, முழு வாழ்க்கைக் காலத்திற்குமான சரியான விசுவாச கட்டுமானத்தையும், விசுவாச வாழ்வையும் கற்றுக்கொடுக்கின்றது. ஞாயிறுபாடசாலையில் பெறும் கல்விதான் ஒருவரது மரணம் வரையான வாழ்வில் அவரது விசுவாத்தையும், வாழ்வுநெறியையும் தீர்மானிக்கின்றது. மாறாக, சிறுவர் அருட்பணியின் வழியாக குறுகிய கால,  உடனடி விளைவுகளை எதிர்பார்க்கின்றபோது, நமது விசுவாசம் குறித்த கருதுகோள் மிக குறுகியது என உணரவேண்டும். குறுகிய கால விசுவாசம் உடனடி விளைவுகளை கொடுக்கும் அற்புதங்கள,; வாக்குறுதிகளில் இருந்த எழுகின்றது.  நீண்டு நீடித்த விசுவாசம் என்பது இறைவனின் முடிவில்லா ஆற்றலையும், தெய்வீகத்தையும் புரிந்து வாழ்வதில் உண்டாகின்றது.

கிறிஸ்துவில் சந்தேகமற பற்றும் ஒரே ஒரு விசுவாசம் மட்டுமே சிறுவர்கள் தங்களை முழமையாக ஆண்டவருக்கென ஒப்படைக்கவும், தங்கள் முழு இருதயத்தை கொடுக்கவும் உதவும். ஆண்டவர் முடிவில்லா ஆண்டவர்;, சந்ததி சந்ததியாக நம் ஆண்டவர். திருப்பாடல்கள் 144:12, யாத்திராகமம் 3: 14,15 அதாவது, ஆண்டவருடைய வார்த்தையை சிறுவர்களுடைய இருதயங்களில் ஆழப்பதிப்பதன் வழியாக ஆண்டவரை தம் வாழ்வில் முழுமையாக சிறுபராயத்திலேயே ஏற்றுக்கொள்ளவும், அவர்கள் கடவுளின் தெய்வீகத்தை புரிந்தனுபவிக்க செய்வதன் வழியாகவும்தான் இந்த முழமையான ஒப்படைப்பு நடைபெறும்.

வளமான வருங்காலத்தை கட்டமைப்பதற்கான பணி

இன்றைய சூழல்: குழந்தைகள் மீதான தாக்குதல்கள், கருவறையில் அழிக்கப்படுபவை,
போர், குறையுணவு, கவனமின்மை காரணமாக மில்லியன் கணக்கான பிள்ளைகள் இறப்பு
சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் விபச்சாரம், சிறுவர் வியாபாரம், சிறுவர் தொழிலாளர்
நீலப்படங்கள், வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பன சிறுவர்களை மோசமாக பாதித்துள்ளது. ஆண்மைய பத்திரிகைகளில் யாழ்ப்பாண பொதுச் சுகாதார சேவையினரால் வெளியிடப்பட்ட குறிப்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த 5 மாதங்களில் பதினெண்டு வயதிற்கு குறைந்த 75 பேர் கர்ப்பம் தரித்திருப்பதாகவும், இவர்களில் அநேகர் பாடசாலை மாணவிகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு, விழிப்புணர்வு, கிறிஸ்தவ நெறிவாழ்வு போல்வன கடைப்பிடிக்கப்படுவது மிக மோசமாக சிதைவடைந்திருப்பதை நாம் தௌ;ளத்தெளிவாக காணமுடிகிறது.
வளமான சமூகத்தை கட்டமைக்க விரும்புவோர் சிறுவர்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும், சமயக் கல்வியும், விழுமியக்கல்வியும் இணைந்த கல்விச்செயற்பாடுகள் சமய நிறுவனங்களில் அதிக முக்கியத்துவம் பெறவேண்டும்.

எமது குழந்தைகள்தான் நமது எதிர்காலம். நாளைய தலைவர்கள்.
இன்று சிறுவர் அருட்பணிக்கு விசுவாசமும், துணிச்சலுமுள்ள ஆண்களும் பெண்களும் தேவைப்படுகின்றனர் சிறுவர் அருட்பணி என்பது பலராலும் அசட்டை செய்யப்படுகின்ற ஒன்றாகவும், அது வெறும் விளையாட்டு, முக்கியமற்றதொன்று போலவும் உணரப்படுகின்றது. இன்நிலை மாறவேண்டும். சிறுவர் அருட்பணியின் முக்கியத்துவம் குருமாராலும், திருச்சபை தலைமைகளாலும், பங்கு மக்களாலும், பெற்றோராலும் ஆழமாக விளங்கிகொள்ளப்படவேண்டும். இறையியல் பள்ளிகளிலும் சிறுவர் அருட்பணியின் முக்கியத்துவம், நுணுக்கங்கள் குறித்த கல்வியறிவூட்டல் பாடவிதானங்களில் கட்டாயமாக்கப்படவேண்டும். இப்பணியில் ஈடுபட்டுழைக்க விரும்பும் இறைமக்கள் அதற்கான ஆதரவினையும், பயிற்சியையும் பெற வாய்ப்புக்கள் திருச்சபையில் இன்னும் பெருகவேண்டும்.

நவகால ஞாயிறு பாடசாலை இயக்கத்தின் பிதாமகன்
றொபர்ட்; றேய்கஸ் (1736 – 1811)

இங்கிலாந்தின் தொழிற்சாலைகள் மிக்க பகுதிகளில் வீதிகளில் அலைந்த குற்றவாளிகளை மனம்மாற்றவேண்டி றொபர்ட் றேய்கஸ் என்பார் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்விகளை தழுவ, மனமொடிந்தவராய், ஒருநாள் இரவு நித்திரைப்பாயில் வைத்து புதிய தரிசனம் பெற்றார்.  சிறுபிள்ளைகளின் பிஞ்சுக்கால்களால்தான்;;;;;;;;;;; இவ்வுலகு முன்னோக்கி வீறுநடை போடுகின்;;;றது என்ற தரிசனமே அது. பெரியவர்களை மாற்றுவதை விட சிறந்த சிறுவரை உருவாக்குதலே சரியானது என உணர்ந்தார். வருமுன் காத்தலே சிறந்தது என்பதை உணர்ந்தார் றொபர்ட்.
தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பல சிறுவர்களை கண்டு மனதுருகினார். ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஓய்வு பெற்றுக்கொள்ளகூடிய இச்சிறுவர்கள் மத்தியில் விவிலியத்தை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். மேலும் அவர்கட்கு எழுத, படிக்க கற்றுக்கொடுக்கவும் ஆரம்பித்தார்.
சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு ஓர் ஞாயிறு பாடசாலை தோற்றுவித்தார். ஏனெனில் ஞாயிறு மட்டுமே சிறுவர்களை அணுக அவரால் முடிந்தது.
வெளியிலிருந்தும் வழமைபோலவே திருச்சபைக்குள்ளிருந்தும்,; எழுந்த எதிர்ப்புகளையும் மீறி, முதலாவது ஞாயிறு பாடசாலையை இங்கிலாந்தில், குளுசெஸ்டரில் 1780இல் ஆரம்பித்தார். ஆரம்பத்தில் ஆண்பிள்ளைகள் மட்டுமே கலந்துகொண்டனர். ஏண்ணிக்கை அதிகரித்தபோது பெரிய பிள்ளைகள் சிறிய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தனர்.
றோபர்ட் றேய்க்கஸ் இப்பிள்ளைகளின் கல்விக்காக 4 நூல்களை எழுதினார். இதில் திருவிவிலியமே அடிப்படையான கற்பித்தலாக இருந்தது. புpன்னாட்களில் பெண்பிள்ளைகளும் இவ்வகுப்புகளில் கலந்து கொள்ளவாரம்பித்தனர்.
விரைவிலேயே ஏராளமான ஞாயிறு பாடசாலைகள் குளுசெஸ்டரை சூழு தோன்றவாரம்பித்தன. நவம்பர் 3, 1783இல் றேய்கஸ் ஞாயிறு பாடசாலைகளின் அவசியத்தை குறித்து தமது பத்திரிகையில் கட்டுரை ஒன்று வரைந்தார். அனைவரும் இவற்றால் கவரப்பட்டனர். பல பத்திரிகைகள் இவருடைய பணி குறித்து சிலாகித்து எழுத ஆரம்பித்தன.
பல்வேறு நபர்களும் குழுக்களும் இப்புனித கைங்கரியத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். 4 வருடங்களுக்குள்ளே இங்கிலாந்து முழவதும் 250,000 சிறுவர்கள் ஞாயிறு பாடசாலைகளில் கலந்துகொண்டிருந்தனர். றோபர்ட் றேய்கஸ் 1811 இல் மரணமானார். 1831ம் வருடத்தில் பிரித்தானியா முழவதிலுமுள்ள ஞாயிறு பாடசாலைகள் வாராந்தம் 1,250,000 சிறுவருக்கு அருட்பணி புரிந்துகொண்டிருந்தது.

உங்கள் ஆலயங்களிலுள்ள சிறாருக்கு ஆண்டவரின் அன்பை புரியவைத்து இறைநம்பிக்கையுள்ள நற்பிரஜைகளாக உருவாக்க நீங்கள் செய்யப்போவது என்ன?

சிறுவர் அருட்பணியருக்கான  அல்லது ஞாயிறு பாடசாலை ஆசிரியருக்கான அழைப்பு
சிறுவர் அருட்பணியாளர்கள் கிறிஸ்துவின் உடலில் முக்கிய பங்கு பெறுகின்றனர்
இவர்கள் இச்செயற்பாட்டை சாதாரணமாய் எடைபோடாது, தூயாவியரின் வலுவூட்டலிலும், அவர் அருளும் கொடைகளிலும் முழுமையாய் தங்கியிருக்கவேண்டும்,
ஓவ்வொருவருடைய தனிவாழ்விற்கும் இறைவன் ஓர் நோக்கத்தை கொண்டுள்ளார், நீண்டு நீடித்த சமுதாய மாற்றம் வேண்டுவோர், சிறுவர் அருட்பணிக்கு தம்மை தயாராக்கவேண்டும்.
ஆண்டவர் தமது முதன்மையான கட்டளையை நமக்கு தருகின்றார். மத்தேயு 22: 37 – 39 அர்த்தமுள்ள இறைப்பணிக்கு கடவுளோடு தனிப்பட்ட உறவும், இயேசு கிறிஸ்துவி;;ல் செயற்படும் விசுவாசமும் தேவை. இதுவே இறைபணியாளர்கட்கு அடிப்படையானதாகும்.

மாபெரும் பணி:

மாபெரும் கட்டளை தனிப்பட்டவர்களுக்குரியது, மாபெரும் பணி திருச்சபைக்குரியது. மத்தேயு 28: 18 – 20 சீடராக்குங்கள்! கற்பியுங்கள்! போங்கள், திருமுழுக்காட்டுங்கள், கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள்
ஆண்டவருக்கு அதை செய்ய அதிகாரம் இருப்பினும், (வச 18) அவர் குருமாரையும், சிறுவர் அருட்பணியார்களையும் அப்பணிக்கென தெரிந்துள்ளார். நாம் ஆண்டவரோடு சேர்ந்து பணிசெய்யும் பணியாட்கள்! மேலும், எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குதல் என்பது சிறுவர்களையும், கிறிஸ்தவ தொடர்பற்ற சிறுவர்களையும் உள்ளடக்குன்றது. இத்தகையோரை ஒதுக்கிவிட்டு, செயற்படுத்தப்படும் அருட்பணி எதுவும் முழுமையடையமாட்டாது. 

ஞாயிறு பாடசாலை, மாபெரும் பணியை நிறைவேற்றுவதற்கான திருச்சபையின் அமைப்பு

இங்கு பல்வேறு வகையான அணுகுமுறைகள், திறன்கள், கொடைகள் கொண்ட பல தனிநபர்கள் ஒன்றாக குழுவாக பணியாற்றகின்றனர். ஞாயிறு பாடசாலையின் பணிகள் பலவாறாகும். மக்களை அணுகுதல், மக்களுக்கு விவிலியத்தை கற்றுக்கொடுத்தல், மக்களுக்கு பணிசெய்தல், மக்களுக்கு சாட்சியாயிருத்தல், மக்களை வழிபாட்டில், ஆன்மிகத்தில் வளர்த்தல்,மக்களோடு கூட்டுறவு கொள்ளுதல் என இதன் பணி விரிவடைந்துசெல்கின்றது.

நிறைவாக ஆசிர்வாதம்:

இப்பணியில் கடவுளின் உடன் உழைப்பாளர்கள் (1கொரி 3:9) என்ற ஆத்மதிருப்தி எம்மை நிறைவாக்குகின்றது. மேலும் ஆண்டவர் நம்மை நோக்கி, நன்று நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புக்களில் நம்பிக்கைகு உரியவராய் இருந்தீர், எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்குகொள்ளும் என்பார். மத்தேயு 25: 21

உங்கள் ஆலயங்களிலுள்ள மற்றும் அருகிலுள்ள சிறாருக்கு ஆண்டவரின் அன்பை புரியவைத்து இறைநம்பிக்கையுள்ள நற்பிரஜைகளாக உருவாக்க நீங்கள் செய்யப்போவது என்ன?

அருட்திரு. ம. யூட் சுதர்சன்,
இயக்குநர், சமயக் கல்விச் சபை
அருட்பணியாளர், அளவெட்டி ஆலயம்.

No comments:

Post a Comment