Thursday, August 18, 2011

சமய கல்விக்குழு யாழ்ப்பாணப் பிராந்தியம் ஆண்டறிக்கை 2010

ண்டவரின் அருளால் யாழ்ப்பாணப் பிராந்தியத்திற்கான சமயக் கல்விக்குழுவின் பணிகளை இதுவரை நிறைவேற்ற தந்த வல்லமைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன். அவரருளால் இவ்வறிக்கையை சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்தவருடத்தில்  5 முறை யாழ்ப்பாண பிராந்தியத்திற்கான சமயக்கல்விக் குழுவினர் 20 யூன், 15 ஆகஸ்டு,  18 செப்ரெம்பர், 22 நவம்பர் ஆகிய திகதிகளில் கூடியுள்ளனர்.

மரணம்:
திருமதி கிருபா பவசிங்கம் அவர்கள் இயற்கையெய்தினார். சமயக்கல்விக் குழுவின் நீண்டகால உறுப்பினராக இருந்து பல அரும்பணியாற்றிய அவர்களது இழப்பு நம்மனைவருக்கும் பேரிழப்பாகும். இவரது வெற்றிடத்திற்கு அருட்சகோ. கமலக்குமார் அவர்கள் நியமிக்கப்பட்டார். சமயக்கல்விக் குழுவின் உதவி இயக்குநராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டார்.

விலகல்:
அருட்திரு. மைனசீலன் அவர்கள் தமது தனிப்பட்ட காரணங்களுக்காக சமயக்கல்விக் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவரது இடத்திற்கு அவர்கள் அருட்திரு. டானியல் ரஞ்சித் ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.

ஞாயிறு பாடசாலை ஆசிரியருக்கான செயலமர்வுகள்:
7 பெப்ரவரி, 31 யூலை ஆகிய தினங்களில் இரு ஆசிரியர் செயலமர்வுகள் நடைபெற்றன. முதலாவது செயலமர்வு கடந்த வருடத்திற்கான ஞாயிறு பாடசாலை பாடவிதானத்தை திட்டமிடுவதாகவும், இரண்டாவது சிறுவர் அருட்பணியினை பாரம்பரிய முறைமைகளிலிருந்து விடுவித்து விஸ்தரிப்பு பற்றியதாகவும் அமைந்திருந்தது.

பிள்ளைகள் விழா
28 ஆகஸ்டு 2010 அன்று மிகச்சிறப்பாக அளவெட்டியில் நடைபெற்றது. ஆளவெட்டி அலயத்தில் காலை வழிபாடுகள் நிறைவுபெற்றது. இவ்வழிபாட்டினை அளவெட்டி ஆலய ஓய்வு நாட்பாடசாலைப் பிள்ளைகள் நடாத்த, திருமதி. கலைச்செல்வி கமலகுமாரன் அருளுரையாற்றினார். இறையாசியை அருட்திரு. அ. nஐயகுமாரன் வழங்கினார். அதனை தொடர்ந்து பவனி நடைபெற்றது.  பத்துபனை ஒழுங்கையூடாக  சென்று சங்கானை – அச்சுவேலி பிரதான வீதியை அடைந்து அளவெட்டி அருணாசலம் பாடசாலையை நோக்கி பெரும் பவனியாக பிள்ளைகளும் ஞாயிறு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெரியோரும் சென்றனர்.
500க்கும் மேற்பட்டோர் கூடிய இந்நிகழ்வில் தமிழ் தனிப்பாடல்போட்டிகள், குழுப்பாடல் போட்டிகள், ஆங்கில குழுப்பாடல் போட்டிகள், விவிலிய புதிர்ப்போட்டிகள் என சிறப்பாக களைகட்டியிருந்தது. நடுவர்களாக பணியாற்றிய நண்பர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.

22 ஆகஸ்டு 2010 அன்று ஆலயங்களில் மனன வசனங்கள், கட்டுரைப்போட்டிகள், சித்திரப்போட்டிகள் என்பன அவ்வவ் ஆலயங்களிலேயே நடாத்தப்பட்டு அதற்குரிய சான்றிதழ்களும் பரிசில்களும் சிறுவர் விழா அன்று பரிசளிப்பு நிகழ்வில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு சிறப்புற நடைபெற உதவிய அனைவருக்கும் குறிப்பாக அளவெட்டி ஆலய மக்கள், குருமார், அளவெட்டி அருணாசல வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், முற்போக்கு சனசமூக நிலையத்தினர் மற்றும் பணவுதவிகள் வழங்கிய திரு. இராஜநாயகம், திரு. மனோ தேவசகாயம் ஆகியோருக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.

வாலிபர் கருத்தரங்கம்:
16 ஒக்டோபர் 2010 நடைபெற்றது. சகோதரர். nஐயராஐ; அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு ஆண்டவரில் வாழ்தல் குறித்து இளையோருக்கு சிறப்புரை ஆற்றினார்.

ஞாயிறு பாடசாலை ஆண்டிறுதிப் பரீட்சைகள்:
12 டிசம்பர் 2010 நடைபெற்றது. பரீட்சை வினாத்தாள்களை தயாரித்த திருமதி, பவானந்தினி உதயணன், திருமதி. மஞ்சுளா ஆனந்தநாயகம், திருமதி, இந்திரா தேவமித்திரன், திருமதி, சுபாசினி ஹரிச்சந்திரா மற்றும் பல்வேறு உதவிகளையும் வழங்கிய செல்வி. nஐயதர்சினி யோசேப் அவர்கட்கும் விடைத்தாள்களை திருத்தி வழங்கிய ஞாயிறுபாடசாலை ஆசிரியர்கட்கும் எமது நன்றிகள்.

குட்டீஸ் கொண்டாட்டம்
நத்தார் கால சிறுவர் நிகழ்ச்சி 15 டிசம்பர் 2010 அன்று சிறுவர்களின் காலை வழிபாட்டுடன் கிறிஸ்த சேவ ஆச்சிரமத்தில் ஆரம்பமானது. காலை நேர ஆரம்ப வழிபாட்டை நவாலி ஆலய ஞாயிறு பாடசாலைப்பிள்ளைகள் சிறப்பாக நடாத்தினர்.
மிகுதி நிகழ்வுகள் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறுவர் நற்தூதுப்பணி அமைப்பினை சேர்ந்த செல்வி. மிலானி அவர்கள் நற்செய்தி பகிர்வு நிகழ்வை நடாத்தினார். சிறுவருக்கான விளையாட்டு நிகழ்வுகளை சகோ.தேவானந் மற்றும் சகோ. யூட் அவர்களும் நடாத்தினர்.
சிறுவருக்கான ஒற்றுமையாக வாழ்தல் எனும் தலைப்பைக் கொண்ட பொம்மலாட்டம் ஒன்று திரையிடப்பட்டது. நிறைவு நிகழ்ச்சிகளை அருட்திரு. ராஐ;குமார் அவர்கள் நடாத்தினார்.

திருச்சபைகளின் ஒன்றிணைந்த நத்தார் இசைவழிபாடு
மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் 18 டிசம்பர் 2010 அன்று பிற்பகல் 3 மணிக்கு மிக விமரிசையாக நடைபெற்றது. எமது ஆலயங்களில் பாடகர் குழாம்களின் பாடல்களுடன், வேறு சில சபைகளும் பாடல்களை வழங்கின. அருடதிரு. தேவதாஸ், பாஸ்டர். nஐனோ ஆகியோர் தேவசெய்திகளை வழங்கினர். அருட்திரு. அ. nஐயகுமாரன் அவர்கள் நிறைவு செபத்தினையும், இறையாசியையும் வழங்கினார். கல்வாரி தேவாலய இசைக்குழுவினர் இசைவழங்கினர். இதற்கு பொறுப்பாக இருந்து பணியாற்றிய அருட்திரு. தேவமித்திரன் அவர்கட்கு எமது நன்றிகள்.

அன்புப்பரிசு:
யாழ்ப்பாணப்பிராந்தியத்தினால் நமது புதிய திருச்சபை பரிணமித்ததிலிருந்து நத்தார் நாட்களில் உதவி தேவைப்படும் இடங்களில் அன்புப்பரிசு எனும் பரிசுப்பொதிகள் சபைமக்களால் வழங்கப்படும் நிகழ்வுகள் இம்முறையும் அனைத்து சபைமக்களாலும் சேகரிக்கப்பட்டது. இப்பரிசுகள் மருதனார்மடத்திலுள்ள நற்செய்திபணி மைய பிள்ளைகளிற்கும், நாக்கணாவத்ததை, கலைநகர் சிற்றாலங்களில் சிறுவர் நிகழ்வுகளில் கூடும் பிள்ளைகளுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது 18 டிசம்பர் 2010 அன்று நடைபெற்றது.  இதற்கு பொறுப்பாகவிருந்து பணியாற்றிய அருட்திரு. அன்றூ nஐயானந்தம் அவர்கட்கும், பரிசுகளை வழங்கிய அனைத்து சபை மக்களுக்கும் குருமாருக்கும் எமது நன்றிகள்.

வாலிபர் பணி:
யாழ்ப்பாணப்பிராந்திய வாலிபர் பணியை சிறப்பாக முன்னெடுக்கவென சகோதரர். தேவானந் அரியதாஸ் அவர்கள் வாலிபர் பணிக்கான கூட்டுனராக தெரிவு செய்யப்பட்டார். புல்வேறு சபைகளுக்கும் இவர் கடந்த வருடத்தில் வருகை தந்து வாலிபர் சங்கங்களை சந்தித்துள்ளார். மேலும் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயும் அவர்களின் அழைப்பின்பேரில் வவுனியா, திருகோணமலை, nஐயபுரம் சபைவாலிபர்களுடன் வாலிபர்களுக்கான நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளார்.  இவரது பணிக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் எமது நன்றிகள்.

எமது பணிகள் சிறப்புற நடைபெற உதவிய சமயக் கல்விக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், பிராந்திய தலைவர். அருட்திரு ராஐ;குமார், தலைவர். அ. nஐயகுமாரன் அவர்கட்கும் அனைத்திற்கும் மேலாக நம் ஆண்டவர் வழங்கிய நல்லுதவிகளுக்காகவும் நன்றிகள்.

No comments:

Post a Comment