Sunday, July 24, 2011

சிறுவர் ஒன்றுகூடல்

அன்புசால் நண்பர்களுக்கு வணக்கம்.

அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையானது வருடம் தோறும் சிறுவர் ஒன்றுகூடல் ஒன்றினை நடாத்துவதும், அதனையொட்டி வேதாகமம், கிறிஸ்தவ பாடல்கள் சார்ந்து பல போட்டிகளை நடாத்துவதும் நாமறிந்ததே. சிறுவர்களை ஆண்டவரின் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொள்ளுமாறு ஏவி வாழ்வுக்காலமெல்லாம் அவர்கள் அவ்வழி நிற்க இவை உதவுகின்றன.
இன்றைய நிலைமையில் சிறுவர்களை இந்திகழ்ச்சிகளின்பால் ஆர்வத்தை தூண்டியெழுப்பவேண்டிய தேவை நம்மிடத்தில் உள்ளது. இவற்றுக்காக பல புதிய போட்டிகளையும், சிறப்பான பரிசில்களையும், வழங்கவேண்டிய கட்டாயம் உளது. இவற்றுக்காக பெற்றோர், நலன்விரும்பிகள், ஏனைய விசுவாசிகளது உதவிகளை எதிர்ப்பார்த்து நிற்கின்றோம்.

எதிர்வரும் ஆகஸ்டு 27 அன்று 2011ம் ஆண்டிற்கான சிறுவர் விழா நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் பங்குபற்றும் பிள்ளைகளாக ஏறத்தாள 700 பேர் இம்முறை கூடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. (கடந்த வருடம் யாழ் குடாநாட்டு சபைகள் மட்டுமே 500 கூடினர்) இச்செலவுகளை தாங்குவதற்கு தங்களது உதவியை நாடி நிற்கின்றோம்.

இவ்விழாவிற்கான எமது செலவுமதிப்பீடு ரூபா 85,800 ஆகும். புpன்வரும் விடயங்களில் ஏதேனும் ஒன்றிற்கோ, அல்லது ஒன்றின் பகுதிக்கோ நீங்கள் உதவி செய்யும்மாறு கேட்டுநிற்கின்றேன்.


1. பொதுப்போட்டிகளுக்கான பரிசு மதிப்பு  (ஏற்கனவே வழங்கப்பட்டாயிற்று)
2. தனிநபர் பாடல் போட்டிகள்: பரிசுக்கான மதிப்பு ருபா 6,000.00
3. சித்திரப்போட்டி பரிசுக்கான மதிப்பு                 ருபா 6,000.00
4. கட்டுரைப்போட்டி பரிசுகளுகான மதிப்பு      ருபா 4,800.00
5. வேதாகம வசனங்கள் மனனம் செய்தல்:    ருபா 30,000.00
6. விழாத்தொண்டர்களுக்கான உபசரிப்பு       ருபா 5,000.00
7. விழாமலர் வெளியீடு                                           ருபா 5,000.00
8. பிள்ளைகளுக்கான சிற்றுண்டி                       ருபா 21,000.00
9. நற்சான்றுபத்திரங்கள் அச்சடித்தல்              ருபா 3,000.00
10. நிர்வாக செலவுகள்                                            ருபா 5,000.00

தங்கள் உதவியை பணமாக நேரிடையாக என்னிடமோ, அல்லது தங்கள் சபை குருமார் வழியாகவோ, அல்லது மருதானர்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் இயங்கும் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை அலுவலகத்திலோ செலுத்தலாம். வுங்கி மூலம் செலுத்த விரும்புபவர்கள் பின்வரும் வங்கிக்கணக்கை பாவிக்கலாம். புணம் அனுப்புபவர்கள் அதன் விபரத்தை எனக்கு தொலைபேசி வாயிலாகவோ, அல்லது மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கவும் எனது தொடர்புகள்: 0773559944, jsutharshan@gmail.com.


The Bank A/c Details:

Name of A/c:                     Church of the American Ceylon Mission – Jaffna Region
Name of the Bank:          National Savings Bank, Manipay Branch.
Number of A/c:                                1 0107 01 5135 1
The swift Code:                                NSBALKLX

தங்கள் ஆதரவுக்கு நன்றி. இறையாசி நிறைக.


அருட்திரு. ம. யூட் சுதர்சன்
இயக்குநர், சமயக்கல்விச் சபை
25 யூலை 2011  

No comments:

Post a Comment