
அமெரிக்கன் சிலோன் மிசன் தாய்ச்சங்கமாகிய
"பிறநாடுகளில் பணிக்கான அமெரிக்க ஆணைக்குழுவின்"
(The American Board of Commissioners for foreign Missions)
200வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தும்
கட்டுரை சித்திரப் போட்டிகள்
தலைப்பு: இலங்கையில் அமெரிக்கன் மிசன் அருட்பணியாளர்களின் பணியும், அதன்விளைவுகளும்
கட்டுரைப்போட்டி:
வயதுப்பிரிவுகள்:
1) 16 வயதிற்கு கீழ்ப்பட்டோர் குறைந்தது 500 சொற்கள்
2) 17 வயதிலிருந்து 35 வயதுவரை குறைந்தது 1500 சொற்கள்
கட்டுரைகள் A4 தாளில் தெளிவான கையெழுத்தில் அல்லது தட்டச்சிட்டு அனுப்புதல் வேண்டும
சித்திரப்போட்டி:.
1) 16 வயதிற்கு கீழ்ப்பட்டோர்
2) 17 வயதிலிருந்து 35 வயதுவரை
சித்திரங்கள் A3 தாளில் தலைப்பினை பிரதிபலிக்கக்கூடியவாறு
தீட்டப்படுவதுடன், விரும்பிய வர்ணவகை (தீந்தை) பயன்படுத்தப்படலாம்.
ஒவ்வொரு போட்டிக்கும், ஒவ்வொரு வயதுப் பிரிவிற்கும் தனித்தனியான பரிசுகள்!
1ம் பரிசு ரூபா 5000.00 பெறுமதியான பரிசு
2ம் பரிசு ரூபா 3000.00 பெறுமதியான பரிசு
3ம் பரிசு ரூபா 2000.00 பெறுமதியான பரிசு
ரூபா 1000.00 பெறுமதியான மூன்று ஆறுதல் பரிசுகள்
நிபந்தனைகள்:
போட்டியாளர் தமது சொந்த விபரங்களை தெளிவாக தனியான தாளில் எழுதி இணைத்து
அனுப்புதல் வேண்டும்.
போட்டியாளர் தமது ஆக்கங்கள் சொந்த ஆக்கங்கள் என்பதையும், இதற்குமுன்னர்
இவ் ஆக்கங்கள் வேறுபோட்டிகளுக்கோ, நூற்களுக்கோ எழுதப்படவில்லை என்பதை
உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாக்கங்கள் குறிப்பிட்ட போட்டியாளர்களுடையதென்பதை தகுதிவாய்ந்த
ஒருவரால் (மதகுரு, பாடசாலை அதிபர், சட்டத்தரணி, கிராமசேவையாளர்,
பல்கலைக்கழக் துறைத்தலைவர்) சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையில் பணியாற்றுவோர் இப்போட்டிகளில்
பங்குபற்றமுடியாது.
போட்டியின் இறுதித்திகதி 31 ஒக்ரோபர் 2010. இத்திகதியன்றோ அதற்கு முன்பே
எமக்கு கிடைக்கக்கூடியவாறாக நேரடியாகவோ, பதிவுத்தபாலிலோ படைப்பாக்கங்களை
பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
தலைமைச்செயலகம்,
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை,
கிறிஸ்தவ இறையியல்கல்லூரி,
மருதனார்மடம், சுன்னாகம்.
மேலும், கடிதஉறையின் வலது மூலையில் கட்டுரை அல்லது சித்திரப்போட்டி என குறிப்பிடவும்.
உசாத்துணை நூல்கள், இணையத்தளங்கள்:
http://en.wikipedia.org/wiki/
http://en.wikipedia.org/wiki/
http://en.wikipedia.org/wiki/
நூல்கள்:
1. சி.டி வேலுப்பிள்ளை, அமெரிக்க இலங்கை மிசன் சரித்திரம், வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணக் கல்லூரி, 1984
2. சு. nஐபநேசன், அமெரிக்க மிசனும், இலங்கையில் தமிழ் வளர்ச்சியும்,
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி, 1983
மேலதிக விபரங்கள், உதவிகளுக்கு அருட்திரு. ம. யூட் சுதர்சன் அவர்களுடன்
0773 559944 தொலைபேசியிலோ, jsutharshan@gmail.com என்ற மின்னஞ்சல்
மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment