The Youth meet for the CACM Youth held at Manipay Church on 16th of October, 2010. The Program was started with the prayer of Rev. A. V. Jesuthasan and it is followed by Praise and worship, Conducted by Rev.M. Jude Sutharshan assisted by Rev.Luke, Organist, Luxan, Drummer and Rev.Satheesh Daniel who operated the power point song sheet.
After having a tea,Mr.Dhevananth Ariyathas, The coordinator for Youth Work conducted the introduction time and introduced the speaker to the floor. The message was given by Bro. Jeyarah, Lecturer, Colombo Theological Seminary cum one of Associate Directors of Youth For Christ. He challenged the youth
to have brave life against the secularization of belief and gave his personal testimony. Rev. A. Jeyakumaran prayed for the youth and thanked everyone who arranged and helped for the programme.
The participants were asked to write about the meaning of their existence, their vision and if they feel, their call. They came up with their reporting. First of all, The prayer life and Reading the word of God is encouraged and Youth were motivated to do these first.
The Plans and objectives of REB regading Youth Ministry were shared with youth. They all agreed and said ready to support for the forthcoming events.
The Programme was ended with the prayer of Mr. Thampimuthu of Alaveddy and the benediction was said by Rev. V. Rajkumar.
Saturday, October 16, 2010
Monday, October 11, 2010
இளையோர் கூடுகை
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை
சமயக் கல்வி இயக்ககம், யாழ் பிராந்தியம்
இளையோர் கூடுகை 16 ஒக்தோபர் 2010
இளையோருக்கான கூடுகை மானிப்பாய் ஆலயத்தில் எதிர்வரும் 16 ஒக்தோபர் 2010 அன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். இளையோருக்கும், குருமாருக்குமாக இளையோர் அருட்பணி சம்பந்தமாக கருத்தரங்கமும், பட்டறையும் நடைபெறும்.
வளவாளராக சகோ. nஐயராஐர் அவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
மதியவுணவு உண்டு. தங்கள் காணிக்கையாக ரூபா 75 வேண்டிநிற்கின்றோம்.
Sunday, October 10, 2010
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை - கட்டுரை சித்திரப் போட்டிகள்

அமெரிக்கன் சிலோன் மிசன் தாய்ச்சங்கமாகிய
"பிறநாடுகளில் பணிக்கான அமெரிக்க ஆணைக்குழுவின்"
(The American Board of Commissioners for foreign Missions)
200வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தும்
கட்டுரை சித்திரப் போட்டிகள்
தலைப்பு: இலங்கையில் அமெரிக்கன் மிசன் அருட்பணியாளர்களின் பணியும், அதன்விளைவுகளும்
கட்டுரைப்போட்டி:
வயதுப்பிரிவுகள்:
1) 16 வயதிற்கு கீழ்ப்பட்டோர் குறைந்தது 500 சொற்கள்
2) 17 வயதிலிருந்து 35 வயதுவரை குறைந்தது 1500 சொற்கள்
கட்டுரைகள் A4 தாளில் தெளிவான கையெழுத்தில் அல்லது தட்டச்சிட்டு அனுப்புதல் வேண்டும
சித்திரப்போட்டி:.
1) 16 வயதிற்கு கீழ்ப்பட்டோர்
2) 17 வயதிலிருந்து 35 வயதுவரை
சித்திரங்கள் A3 தாளில் தலைப்பினை பிரதிபலிக்கக்கூடியவாறு
தீட்டப்படுவதுடன், விரும்பிய வர்ணவகை (தீந்தை) பயன்படுத்தப்படலாம்.
ஒவ்வொரு போட்டிக்கும், ஒவ்வொரு வயதுப் பிரிவிற்கும் தனித்தனியான பரிசுகள்!
1ம் பரிசு ரூபா 5000.00 பெறுமதியான பரிசு
2ம் பரிசு ரூபா 3000.00 பெறுமதியான பரிசு
3ம் பரிசு ரூபா 2000.00 பெறுமதியான பரிசு
ரூபா 1000.00 பெறுமதியான மூன்று ஆறுதல் பரிசுகள்
நிபந்தனைகள்:
போட்டியாளர் தமது சொந்த விபரங்களை தெளிவாக தனியான தாளில் எழுதி இணைத்து
அனுப்புதல் வேண்டும்.
போட்டியாளர் தமது ஆக்கங்கள் சொந்த ஆக்கங்கள் என்பதையும், இதற்குமுன்னர்
இவ் ஆக்கங்கள் வேறுபோட்டிகளுக்கோ, நூற்களுக்கோ எழுதப்படவில்லை என்பதை
உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாக்கங்கள் குறிப்பிட்ட போட்டியாளர்களுடையதென்பதை தகுதிவாய்ந்த
ஒருவரால் (மதகுரு, பாடசாலை அதிபர், சட்டத்தரணி, கிராமசேவையாளர்,
பல்கலைக்கழக் துறைத்தலைவர்) சான்றுப்படுத்தப்பட வேண்டும்.
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையில் பணியாற்றுவோர் இப்போட்டிகளில்
பங்குபற்றமுடியாது.
போட்டியின் இறுதித்திகதி 31 ஒக்ரோபர் 2010. இத்திகதியன்றோ அதற்கு முன்பே
எமக்கு கிடைக்கக்கூடியவாறாக நேரடியாகவோ, பதிவுத்தபாலிலோ படைப்பாக்கங்களை
பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
தலைமைச்செயலகம்,
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபை,
கிறிஸ்தவ இறையியல்கல்லூரி,
மருதனார்மடம், சுன்னாகம்.
மேலும், கடிதஉறையின் வலது மூலையில் கட்டுரை அல்லது சித்திரப்போட்டி என குறிப்பிடவும்.
உசாத்துணை நூல்கள், இணையத்தளங்கள்:
http://en.wikipedia.org/wiki/
http://en.wikipedia.org/wiki/
http://en.wikipedia.org/wiki/
நூல்கள்:
1. சி.டி வேலுப்பிள்ளை, அமெரிக்க இலங்கை மிசன் சரித்திரம், வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணக் கல்லூரி, 1984
2. சு. nஐபநேசன், அமெரிக்க மிசனும், இலங்கையில் தமிழ் வளர்ச்சியும்,
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி, 1983
மேலதிக விபரங்கள், உதவிகளுக்கு அருட்திரு. ம. யூட் சுதர்சன் அவர்களுடன்
0773 559944 தொலைபேசியிலோ, jsutharshan@gmail.com என்ற மின்னஞ்சல்
மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.
Monday, October 4, 2010
வாலிபர் அருட்பணி
அன்பிற்குரிய குருமாருக்கும் மற்றும் வாலிபர்களுக்கும்,
அமெரிக்ன் சிலோன் மிசன் திருச்சபையின் யாழ்ப்பாணப் பிராந்திய வாலிபர்களுக்காக கூடுகை எதிர்வரும் 16ம் திகதி காலை 9 மணிக்கு மானிப்பாய் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. உங்கள் ஆலயங்களிலிருந்து இயன்றவரை அனைத்து வாலிபர்களையும் வருவதற்கு ஊக்குவியுங்கள். வருபவர்களின் எண்ணிக்கையை எமக்கு தயவுசெய்து 14 திகதிக்கு முன்னதாக கிடைக்கும்படி தாருங்கள். இதனால் நிகழ்ச்சியை சிறப்பாகவும், உணவு ஏனைய பிற ஆயத்தங்களையம் சிறப்பாக செய்ய ஒத்துழைப்பு தாருங்கள்.
வாலிபர் அருட்பணி குறித்து குருமாருக்கான நிகழ்வும் இதே நாளில் மானிப்பாயில் குருமாருக்கென தனியாக நடாத்த திட்டமிட்டுள்ளோம். குருவானவரின் மனைவியரும் இதில் பங்கேற்க அழைக்கின்றோம். தயவு செய்து தங்கள் வருகை குறித்தும் எமக்கு 14ம் திகதிக்கு முன் அறியத்தந்து ஒத்துழைப்பு தாருங்கள்.
நிகழ்வு: வாலிபர் மற்றும் குருமாருக்கான சிறப்புக் கூடுகை
இடம்: மானிப்பாய் அமெரிக்கன் சிலோன் மிசன் தேவாலயம்
காலம்: 16 சனிக்கிழமை, ஒக்டோபர், 2010 காலை 09.00மணி
உங்கள் வேதாகமம், மற்றும் குறிப்பேடுகளை கொண்டுவாருங்கள். மதியவுணவு வழங்கப்படும். ஒவ்வொரு வாலிபரிடமிருந்தும் ரூபா 75.00 காணிக்கையாக எதிர்பார்க்கின்றோம். நன்றி.

Subscribe to:
Posts (Atom)