Saturday, November 27, 2010

Religious Education Board - Advent Circular 2010

மதிப்புக்குரிய குருமாருக்கும், சபை மக்களிற்கும்,

வணக்கம். தயவுசெய்து பின்வரும் நிசழ்வுகளை கவனத்தில் எடுத்து அவற்றிற்குரிய விபரங்களையும், ஒத்துழைப்பையும் தரும்படி தயவாய் வேண்டிநிற்கின்றேன்.

1. ஞாயிறு பாடசாலை பரீட்சைகள்:
எமது ஆலய ஞாயிறு பாடசாலை பிள்ளைகளுக்கான ஆண்டிறுதி பரீட்சைகள் 12 டிசம்பர் 2010 அன்று ஞாயிறு வழிபாட்டினை தொடர்ந்து ஆலயத்தில் நடைபெறும். தயவுசெய்து உங்கள் ஆலய ஞாயிறு பாடசாலை பிள்ளைகளின் பின்வரும் விபரங்களை எமக்கு 30 நவம்பர் 2010 அன்று தந்துதவவும்.
(1) பிள்ளையின் முழுப்பெயர் (2) பிறந்த திகதி (3) ஞாயிறுபாடசாலை வகுப்பு
நற்செய்திப்ணி மையங்களில் நடாத்தப்படும் சிறுவர் நிகழ்ச்சிகளில் பங்குபெறும் சிறுவருக்கான பொதுப் பரீட்சை வினாத்தாள்களும் அவசியமாயின், குறிப்பிடவும்.

2. நத்தார் சிறுவர் நிகழ்ச்சி

அனைத்து ஆலய சிறுவருக்கான நத்தார் விழா எதிர்வரும் 15 டிசம்பர் 2010 அன்று காலை 8.30 மணிக்கு நடைபெறும். வரவிருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கையை தயவுசெய்து 30 நவம்பர் 2010 அன்று தரும்படி அன்புடன் வேண்டிநிற்கின்றேன். இந்நிகழ்வுக்குரிய இடம் காலக்கிரமத்தில் அறிவிக்கப்படும். இந்நிகழ்விற்கென பணவுதவி செய்யவிரும்புவோரும் அருட்திரு. வி. இராஐ;குமார் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

3. ஒன்றிணைந்த நத்தார் இசைவழிபாடு:


யுhழ்பாணத்தில் திருச்சபைகளின் ஒன்றிணைந்த நத்தார் வழிபாடு எதிர்வரும் 18 டிசம்பர் 2010 அன்று மானிப்பாய் பிரதேச சபை மண்டபத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும் ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு தனிப்பாடல் வழங்கவேண்டியிருப்பதால், இப்பொழுதே இதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுமாறும், பயிற்சிகளுக்காக குறைந்தது மூன்று பாடகர்களையாவது தங்கள் ஆலயங்களிலிருந்து அனுப்புமாறும் கேட்கப்படுகின்றீர்கள். மேலதிக விபரங்களுக்கும், உதவிகளுக்கும் அருட்திரு. ப. தேவமித்திரன் அவர்களை தொடர்புகொள்ளவும்.

4. அன்புப்பரிசு - நத்தார் பரிசுப்பொதிகள் சேகரிப்பும், விநியோகமும்.
வருடம்தோறும் நடைபெறும் அன்புப்பரிசு நத்தார் பரிசுப்பொதிகளை ஆலயங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். பரிசுகள் பொதிசெய்யப்பட்டு, எத்தவயதினருக்கு, பாலினத்தவருக்கு பொருத்தமானது என்பதையும் வழங்கப்படும் மேலுறையில் குறிப்பிட்டு, 18 டிசம்பர் 2010 நிகழ்வுக்கு வருகையில் தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.  எதிர்வரும் 27 டிசம்பர் 2010 நாளில் தெரிவு செய்யப்படும் இடத்தில் இப்பரிசில் விநியோகிக்கப்படும். இது தொடர்பாக அருட்திரு. அன்றூ nஐயானந்தம் அவர்கள் பொறுப்பாக இருப்பார். அவருடன் ஒத்துழைக்கும்படி வேண்டிநிற்கிறேன்.

எதிர்வரும் திருவருகைக் காலம் தங்கள் கனவுகளை நிஐமாக்கட்டும்.

அன்புடன்,

ம. யூட் சுதர்சன்
சமய கல்வி இயக்குநர்

No comments:

Post a Comment